இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

தமிழகம் புதிய அணை கட்டுவதற்காக பெரியாறு அணைப் பகுதியில் கேரளக் குழுவினர் ஆய்வு

​பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டுவதற்காக,​​ கேரளப் பொறியாளர்கள் குழு பெரியாறு அணைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.ஆய்வுக்கு பின் 6 மாதத்தில் புதிய அணைக்கான வரைபடம்,​​ திட்டமதிப்பு ஆகியன குறித்து மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக,​​ ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டுவது தொடர்பாக,​​ ​வனப்பகுதியின் வெளிப்புறம் இரண்டு கட்டமாக 7.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சர்வே செய்யப்பட்டுள்ளது.​ மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியோடு மூன்றாவது கட்டமாக,​​ பெரியாறு அணை அருகே பெரியார் புலிகள் சரணாலயப் பகுதியில் 300 மீட்டர் தூரத்தில் தெற்குப் பகுதியில் சர்வே நடைபெற்று வந்தது.இந்நிலையில்,​​ புதிய அணைக்கு தேவையான வடிவமைப்பு,​​ திட்ட மதிப்பு,​​ திட்ட அறிக்கைத் தயார் செய்வதற்காக,​​ செவ்வாய்க்கிழமை கேரள அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஆலோசகர் எம்.கே.​ பரமேஸ்வரன் நாயர் தலைமையில்,​​ கேரள ​நீர்ப்பாசன துறையின் முன்னாள் முதன்மைப் பொறியாளர் என்.​ சசி,​​ ​ கேரள ​நீர்ப்பாசன வரைவு ஆராய்ச்சி வாரியத்தின் முதன்மைப் பொறியாளர் பி.என்.​ சதி,​​ லால் பகதூர் சாஸ்திரி மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் ஆலோசகர் கோபாலகிருஷ்ணன்,​​ செயற்பொறியாளர்கள் ஜார்ஜ் டேனியல்,​​ கீதாகுமாரி,​​ உஷாகுமாரி உள்ளிட்ட பொறியாளர்கள் குழு,​​ பெரியாறு அணைப் பகுதியிலுள்ள புதிய அணைக்கான இடத்தை ஆய்வு செய்தனர்.அப்போது,​​ புதிய அணையின் செடி கொடிகள் அகற்றப்பட்ட பகுதியின் வரைபடம் குறித்தும் ஆய்வு செய்தனர்.​ இதேபோல்,​​ லால் பகதூர் சாஸ்திரி மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையினர்,​​ அணைக் கட்டப்படும் இடத்தில் மண்,​​ ​பாறைகளின் கடினத்தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.இது குறித்து,​​ எம்.கே.​ பரமேஸ்வரன் நாயர் கூறியதாவது:கேரள அரசு கேட்டு கொண்டதற்கேற்ப புதிய அணைக்கான வரைபடம் தயாரிக்க உள்ளோம்.​ புதிய அணைக்கான திட்ட மதிப்பீடு,​​ அறிக்கைத் தயாரிப்பதற்காக தற்போது நேரடி ஆய்வு செய்யப்பட்டது.​ ​ இந்தப் பணிகள் முடிந்தவுடன்,​​ மத்திய அரசுக்குத் தாக்கல் செய்துவிட்டு,​​ புதிய அணை கட்டும் பணியைத் துவக்குவோம் ​என்றார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment