வானூர் பகுதியில் தொடர் மழை பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
9:09 PM செய்திகள், வானூர் பகுதியில் தொடர் மழை பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை 0 கருத்துரைகள் Admin
வானூர் : வானூர் பகுதியில் பெய்த கன மழையால் மானாவாரியாக விதைத்த மணிலா, உளுந்து, பச்சை பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகியுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். கடந்த வாரம் வானூர் சுற்றுவட்டார பகுதியான கிளாப்பாக்கம், வண்டிபாளையம், தேற்குணம், எடச்சேரி, புதுக்குப் பம், கீழ்கூத்தப்பாக்கம், தென்கோடிப் பாக்கம், மைலம், மரக்காணம், முருக் கேரி, பிரம்மதேசம் உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட சுற்று வட்டார பகுதியில் தொடர் மழை பெய்தது. இதனால் மானாவாரியாக பயிர் செய்த மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்கள் மழை நீரில் மூழ்கி பயிர்கள் அனைத்தும் அழுகிப் போய் உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.மரக்காணம், வானூர், முருக்கேரி சுற்றுவட்டார பகுதியில் தற்போது விதைக்கப்பட்ட தர்பூசணி விதைகள் மழை நீரில் முழ்கி அழுகிபோய் உள்ளன.
குறிச்சொற்கள்: செய்திகள், வானூர் பகுதியில் தொடர் மழை பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது