இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

ஏமாற்றும் பருவமழை; ஏங்கும் விவசாயிகள்!

கோவை மாவட்டத்தில் அவ்வப்போது தூறல் போடும் தென்மேற்குப் பருவமழை, எப்போது பலமாகப் பொழியும் என எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். தென்மேற்குப் பருவமழையும், வடகிழக்குப் பருவ மழையும் கோவை மாவட்டத்திற்கு ஆண்டு முழுவதுக்குமான நீராதாரத்தை அளிக்கிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பொழியும் தென்மேற்குப் பருவமழை, கோவை மாவட்ட பகுதிகளில் பொழிவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

ஜூனில் பொழிந்தது, வெப்பச் சலனத்தால் பொழிந்த மழை தான்.கோவை மாவட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் விவசாயத்திற்கு பருவமழை தான் ஜீவாதாரம். கடந்த 3 ஆண்டுகளில் மாவட்டத்தில் பொழிந்த மழை அளவு விவரம்: 2007-ல் ஒட்டுமொத்த மழை அளவு 861.8 மி.மீ., 2008-ல் மொத்த மழை அளவு 726.6 மி.மீ., 2009-ல் 824.4 மி.மீ., என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை. மையம் கணக்கிட்டுள்ளது.கடந்த 3 ஆண்டுகளில் மாவட்டத்தில் பொழிந்த தென்மேற்குப் பருவமழை அளவு விவரம்: 2007-ல் 241.3 மி.மீ., 2008-ல் 138.9 மி.மீ., 2009-ல் 248 மி.மீ. மழைப் பொழிவு இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவகாலத்தில் சராசரியாக 140 மி.மீ. முதல் 150 மி.மீ. அளவுக்கு மழைப்பொழிவு கிடைக்க வேண்டும்.

நடப்பு சாகுபடி பயிர்கள்கோவை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் (ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில்) சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் விவரம்: மாவட்டத்தில் மொத்தம் 60 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 2,000க்கும் கூடுதலான ஹெக்டேர் பரப்பளவில் நாற்றங்கால் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.அதுதவிர, சோளம், கம்பு உள்ளிட்ட தானிய வகைகள் 3,507 ஹெக்டேர் பரப்பளவிலும், உளுந்து, துவரை உள்ளிட்ட பயிறு வகைகள் 2109 ஹெக்டேர் பரப்பளவிலும் பயிரிடப்பட்டுள்ளது. எண்ணெய் வித்துப் பயிர்கள் 2,268 ஹெக்டேர் பரப்பளவிலும், பருத்தி 177 ஹெக்டேர் பரப்பளவிலும் பயிரிடப்பட்டுள்ளது.


கரும்பு சாகுபடி 10 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 8,131 ஹெக்டேர் பரப்பளவில் நடப்பு சாகுபடி உள்ளது. விவசாயத்திற்கும், குடிநீர் ஆதாரத்திற்கும் கைகொடுக்கும் தென்மேற்குப் பருவமழை கோவை மாவட்டப் பகுதிகளில் பலமாக பொழிவது எப்போது என வானம் பார்த்து காத்திருக்கின்றனர் விவசாயிகள்.

மீள்பதிவு - நன்றி -தினமணி

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment