இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாய சங்கம் கோரிக்கைவாணியம்பாடி: விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வாணியம்பாடி தாலுகா சார்பில் 9வது மாநாடு கேத்தாண்டப்பட்டி கிராமத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, முல்லை தலைமை வகித்தார். சேட்டு (எ) துரைசாமி, ரகு, பெருமாள், வெங்கடேசன், தண்டபாணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அருள் வரவேற்றார்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வேலூர் மாவட்ட செயலாளர் சாமிக்கன்னு, தனபால், முன்னாள் எம்.பி., ஜெயமோகன், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் நந்தி, ஏ.ஐ.டி.யு.சி. பொறுப்பாளர் ஆனந்தன், திருப்பத்தூர் கம்யூ., பிரமுகர் கோவிந்தராஜ், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட அமைப்பாளர் முருகன், கேத்தாண்டப்பட்டி பஞ்., துணைத் தலைவர் வெங்கடேசன், விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆலங்காயம் உட்பட பல பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள்: விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை அறிவிக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்வது. 2010-11 கரும்பு அரவை பருவ காலத்திற்கு டன் ஒன்றுக்கு 2 ஆயித்து 500 ரூபாய் விலை கொடுக்க வேண்டுமென அரசை கேட்டுக்கொள்வது. திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு பயிரிடும் பகுதியை தனியார் சர்க்கரை ஆலையான பண்ணாரி அம்மன் ஆலைக்கு வழங்கிய உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை ஏற்று மீண்டும் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வழங்கிட உத்தரவிட சர்க்கரை துறை ஆணையரை கேட்டுக் கொள்வது. திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தி நிலையத்தை உடனடியாக துவக்கிட சர்க்கரை துறை ஆணையரை கேட்டு கொள்வது.

தமிழக அரசு ஜல்லி கற்கள் தொழிற்சாலைகளுக்கு கல் குவாரி ஏலம் விடுவதை நிறுத்தி அரசே தொழிற்சாலை அமைத்து வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும். வேலூர் மாவட்டத்திலேயே கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வாணியம்பாடி வட்டார விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின்படி காப்பீட்டு நிறுவனங்கள் பயிர் நஷ்டஈடு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டரை கேட்டுக் கொள்வது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ராஜேந்திரன் நன்றி கூறினார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment