இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விவசாயத்தில் கலக்கும் ஆந்திர பெண்கள்

c

ஆந்திராவில் உள்ள கிராமங்களில் 80 சதவீதம் பெண்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாய வேலைகளில் ஈடுபடும் ஆண்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. பெண்கள்தான் ஏர் உழுவது முதல் அறுவடை வரை அத்தனை வேலைகளிலும் கலக்கி வருகிறார்கள்.

அதிலும் நிஜாமாபாத் மாவட்டம் அங்கபூர் கிராமத்தில் 90 சதவீதம் பெண்கள் விவசாயிகளாக உள்ளனர். 10 சதவீதம் ஆண்கள்தான் விவசாயத்தில் உள்ளனர்.

இங்குள்ள பெண் விவசாயிகள் பயிர்களுக்கு இயற்கையான உரம் போட்டு நல்ல விளைச்சலை பெறுகிறார்கள். என்ன மாதிரியான பயிர்களை விதைப்பது என்று கூட்டாக ஆலோசனை செய்து முடிவு செய்கிறார்கள். இப்படி திட்டமிட்டு விவசாயம் செய்வதால் நல்ல லாபம் கிடைக்கிறது.

இதுபற்றி விவசாயி சுலோச்சனா கூறும்போது, எங்கள் ஊரில் முழுக்க முழுக்க பெண்கள்தான் விவசாயம் செய்து வருகிறோம். ஒரு காலத்தில் பெண்களால் நிலத்தில் மாடு பூட்டி உழவு செய்ய முடியாது என்று ஆண்கள் கூறி வந்தனர். ஆனால் தற்போது நாங்கள் மிக எளிதாக உழவு செய்கிறோம். அதில் எந்த கஷ்டமும் கிடையாது.

அந்த காலத்தில் பெண்களை பயம் காட்டியே எந்த விவசாய வேலையும் செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இப்போது ஆந்திர அரசு பெண்களுக்கு நிறைய உதவி செய்து வருவதால் துணிச்சலாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். கை நிறைய சம்பாதிக்கிறோம். இங்கு ஆண்களை நம்பி யாரும் இல்லை. இதனால் கணவர்களால் கொடுமைப்படுத்தப்படும் சம்பவங்கள் குறைந்துள்ளது என்றார்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment