இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கிலோ ரூ.30க்கு சந்தைக்கு வந்தது அந்தியூர் புளி



ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டாரத்தில் நடப்பாண்டு புளி அறுவடை துவங்கியுள்ளது. சென்றாண்டை விட புளி விளைச்சல் குறைவாக உள்ளது.
சமையலுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களில் புளி பெரும் பங்கை வகிக்கிறது. புளிக்கான தேவை அதிகரித்து வரும் சூழ்நிலையில், நடப்பாண்டு புளி விளைச்சல் குறைந்து போய் ஏமாற்றமளிக்கிறது. அந்தியூர் சுற்று வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான புளிய மரங்கள் உள்ளன. அந்தியூர், பர்கூர் வனப்பகுதியிலும் ஆயிரக்கணக்கான புளிய மரங்கள் உள்ளன. இவை மலை வாழ் மக்களின் நலனுக்காக சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்களுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது. அந்தியூர் - அம்மாபேட்டை ரோட்டில் வழி நெடுக நூற்றுக்கும் மேற்பட்ட புளிய மரங்கள் உள்ளன. நெடுஞ்சாலைத் துறை மூலம் இவை புளி வியாபாரிகளுக்கு குத்தகைக்கு விடப்படுகிறது. நடப்பாண்டு புளி அறுவடை மும்முரமாக துவங்கியுள்ளது. ரோட்டில் பஸ் போக்குவரத்து அதிகளவில் இருப்பதால், மரத்தில் ஏறி கிளைகளை குலுக்கிய பின் கீழே விழும் புளியம்பழங்கள் பெண்களால் சேகரிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை விளையும் புளி, நடப்பாண்டு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு உற்பத்தியில்லை. சென்றாண்டு மரத்தில் ஆங்காங்கே கொத்துக் கொத்தாக புளியம்பழம் தொங்கியது. ஆனால், நடப்பாண்டு மரத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக புளியம்பழம் மிகவும் குறைவாக காணப்படுகிறது.
நல்லபடியாக விளைச்சல் இருந்தால், ஒரு மரத்துக்கு ஐந்து மூட்டை கிடைக்கும். இதில், சரியாக விளையாத புளி கழிக்கப்பட்டாலும், நான்கு மூட்டை நிச்சயம் கிடைக்கும். தற்போது, மரம் ஒன்றுக்கு மூன்று மூட்டை கிடைப்பதே அதிகமாக தோன்றுகிறது. இதனால், புளி டெண்டர் எடுத்த வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
அந்தியூர், பர்கூர் காட்டில் நிலவும் வறட்சி காரணமாக, வனப்பகுதி புளிய மரத்தில் காய்த்திருக்கும் பழங்களை குரங்கு, யானை போன்ற விலங்குகள் சாப்பிட்டு விடுகின்றன. காட்டிலும் புளி விளைச்சல் குறைந்துள்ள போயிருப்பதால், சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்கள் மிகவும் சோர்வடைந்துள்ளனர்.
இதற்கு முதலீடு இல்லையெனினும், வேலைப்பளு அதிகம். அறுவடை செய்த புளியம்பழ ஓட்டையும், பழத்தையும் பிரித்து, உருண்டை பிடிப்பதற்கு, குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு மேலாகிவிடும். அதற்கு பின்பே, சந்தைக்கு கொண்டு வருகின்றனர். கொட்டை நீக்கப்பட்ட புளி அந்தியூர் மார்க்கெட்டில் கிலோ 30 ரூபாய்க்கும், இரண்டாம் தர புளி 25 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment