மல்பெரி பயிர்களுக்கு இயற்கை மற்றும் உயிர் உரம் : விவசாயிகளிடம் வலியுறுத்தல்
4:00 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, மல்பெரி பயிர்களுக்கு இயற்கை மற்றும் உயிர் உரம் 0 கருத்துரைகள் Admin
"முதிர்புழு வளர்ப்பில் புதிய தொழில் நுட்பங்கள்' என்ற தலைப்பில், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை உதவி பேராசிரியர் முருகேஷ் பேசியதாவது: தரமான பட்டுக்கூடு உற்பத்திக்கு சுற்றுச்சூழல், நல்ல மருந்து அவசியமானது. உடுமலையில், சுற்றுச்சூழல் நன்றாக இருப்பதுடன் மேலும், தரமான பட்டுக்கூடு உற்பத்தி மேற்கொள்ள மல்பெரி இலைகள் தரமானதாக வேண்டும். இதற்கு ரசாயன உர அளவை குறைத்து இயற்கை உரம், உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும்.
மண்புழு உரத்தை தொடர்ந்து பயன்படுத்தினால் சாறு உறிஞ்சும் புழுக்களை கட்டுப்படுத்தலாம். பண்ணை கழிவுகளை வீணாக்காமல், "கம்போஸ்' செய்து பூஞ்சானமாக மாற்றி மக்க வைக்க வேண்டும். இதன் மூலம் தரமான மல்பெரி இலைகள் பெறலாம். நல்ல புழு வளர்ப்பிற்கு தட்ப வெப்ப நிலை, காற்றோட்ட வசதி என்பது அவசியமானதாகும். வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் "இளமதி' என்ற மருந்து வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தினால் 6 முதல் 7 கிலோ வரை பட்டுக்கூடு கூடுதலாக கிடைக்கும்.
அறுவடை ஐந்து நாட்களுக்கு பின் மேற்கொள்ள வேண்டும். அறுவடை செய்த பின்பு கூடுகளை காற்றோட்ட பகுதியில் வைக்க வேண்டும். கூடு கட்டிய பின்பு முறையாக தட்ப வெப்ப நிலை பராமரிக்க வேண்டும். கூடுகளை பட்டுக்கூடு அங்காடிக்கு விற்பனைக்கு எடுத்து செல்லும் போது நல்ல குளிர்ந்த நேரத்தில் பாதுகாப்பாக எடுத்து செல்ல வேண்டும். இது போன்ற வழிமுறைகளை பின்பற்றி நல்ல தரமான பட்டுக்கூடுகளை அதிகளவு உற்பத்தி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தரமான பட்டுக்கூடுஉற்பத்தி மேலாண்மை குறித்து உடுமலை மத்திய பட்டு வாரிய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மைய விஞ்ஞானி செல்வராஜ் பேசினார். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து உடுமலை பகுதி பட்டுவளர்ப்பு குறித்து பார்வையிட வந்த 15 விவசாயிகள் மற்றும் உடுமலை பகுதி பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, மல்பெரி பயிர்களுக்கு இயற்கை மற்றும் உயிர் உரம்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது