மானிய விலையில் உளுந்து விதை வேளாண் உதவி இயக்குனர் தகவல்
9:29 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, மானிய விலையில் உளுந்து விதை வேளாண் உதவி இயக்குனர் தகவல் 0 கருத்துரைகள் Admin
கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் வட்டாரத்தில் உளுந்து விதை மற் றும் உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம், நந்தீஸ்வரமங்கலம் வேளாண் விரிவாக்க மையங்களில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் உளுந்து "டி9' சான்று விதைகள் கிலோவிற்கு 20 ரூபாய் மானியத்திலும், தேசிய வேளாண் வளர்ச்சி திட் டத்தின் கீழ் சிங்சல்பேட், நுண்ணுரம் 50 சதவீத மானியத்திலும், ஐசோபோம் எண்ணைவித்து, தேசிய உணவு பாதுகாப்பு திட்டங்களில் ஜிப்சம் 50சதவீத மானிய விலையிலும் வழங்கப்படுகிறது என கூறப்பட் டுள்ளது.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, மானிய விலையில் உளுந்து விதை வேளாண் உதவி இயக்குனர் தகவல்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது