பயிர் காப்பீடு கிடைக்கவில்லை : விவசாயிகள் விரக்தி
7:05 AM செய்திகள், பயிர் காப்பீடு கிடைக்கவில்லை : விவசாயிகள் விரக்தி 0 கருத்துரைகள் Admin
இதனால் இவர்கள் நடப்பாண்டில் விவசாயப்பணிகளில் ஈடுபடவில்லை. தேவிபட்டினம் அருகே புல்லங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தனர். கடந்தாண்டு பெய்த கனமழையால் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். காப்பீடு செய்ததால் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் இருந்தனர்.ஆனால், இவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. பல்வேறு வழிகளில் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகளால், நடப்பாண்டில் பணியினை தொடர முடியாமல் மாற்று பணிக்கு செல்லும் நிலை ஏற்பட் டுள்ளது.
ஊராட்சி தலைவர் முகம்மது அப்துல் கனி கூறியதாவது: மழை அளவு கருவிகளை வைத்து, நிவாரணம் வழங்குவதை தவிர்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு,முறையான ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும், என்றார்.
குறிச்சொற்கள்: செய்திகள், பயிர் காப்பீடு கிடைக்கவில்லை : விவசாயிகள் விரக்தி
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது