இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

அனைத்து ஆலைகளுக்கும் கரும்பு விநியோகம் : மத்திய, மாநில அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

"குறிப்பிட்ட பகுதியில் உள்ள சர்க்கரை ஆலைக்கு தான் கரும்பு விநியோகிக்க வேண்டும் என்றில்லாமல், அனைத்து ஆலைகளுக்கும் சப்ளை செய்யும் உரிமையை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்' என, விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலத்தில் இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு(சிஃபா) பொதுச்செயலாளர் விருத்தகிரி கூறியதாவது: இந்தியாவில் உள்ள 110 கோடி மக்கள் தொகையில், 70 கோடி பேர் விவசாயிகளாக உள்ளனர். வேளாண் சார்ந்த தொழில் மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கரும்புக்கான கொள்முதல் விலை பிற மாநிலங்களில் அதிகப்படியாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் டன்னுக்கு 1,500 ரூபாய் வழங்கப்படுகிறது. வெட்டுக்கூலி, ஏற்றுக்கூலி, இறக்கு கூலியென, அதில் மட்டுமே 700 ரூபாய் வரை செலவாகிறது. கரும்பை நடவு செய்யும் விவசாயிகள் ஆலைகளில் பதிவு செய்யக்கூடாது. பதிவு செய்யாத விவசாயிகளுக்கு தான் கூடுதல் விலை கிடைக்கிறது. கரும்புகளை பயிரிட்டுள்ள பகுதிகளில் உள்ள சர்க்கரை ஆலைக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை மாற்றி அனைத்து ஆலைகளுக்கும் வழங்கலாம் என்ற உத்தரவை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும். சர்க்கரை மூலம் கிடைக்கும் லாபத்தை, ஆலைகளுக்கும், விவசாயிகளுக்கும் பிரித்து கொடுக்கும் 5ஏ என்ற சட்டம் பார்லிமென்டில் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த சட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என தமிழக எம்.பி.,க்கள் வலியுறுத்த வேண்டும். பிற மாநிலங்களில் கரும்பு டன்னுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 2,800 ரூபாய் வழங்க வேண்டும். அவ்வாறு கரும்புக்கு உரிய விலை கிடைக்காதபட்சத்தில் கரும்பு பயிரிட விவசாயிகள் முன்வரமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment