இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் டெல்டா விவசாயிகள் கவலை : நோய் தாக்கி விளைச்சல் குறைந்ததால் பாதிப்பு

டெல்டா பாசன பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் பகுதியில் நோய் தாக்கியதால் நெல் மகசூல் குறைந்ததாலும், போதிய விலை இல்லை என்பதாலும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காவிரி டெல்டா பாசன பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் பகுதியில் ஒரு லட்சத்து 25 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஜூன் மாதம் துவங்கும் சம்பா சாகுபடி இந்த ஆண்டு தண்ணீர் தாமதமாக திறக்கப்பட்டதால் சாகுபடியும் தாமாகியது. சுமார் 70ஆயிரம் ஏக்கருக்கு மேல் இந்த ஆண்டு வீராணம் மற்றும் வடவாறு பாசனம் மூலம் பயிரிடப்பட்டது. ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங் களில் பெய்யும் மழை மற்றும் வெள்ளத்தால் கடந்த சில ஆண்டுகளாகவே சம்பா சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடுமையான வெள்ள பாதிப்பு இல்லை என்றாலும் மழையால் நெற்பயிரில் பூ வெளியில் வரும் சூல் பருவத்தில் நோய் தாக்குதல் ஏற்பட்டு விளைச்சல் பாதியாக குறைந்துவிட்டதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பா பருவத்தில் நியாயமான விலை கிடைக்கும் என்பதால் 135 நாட்கள் விலையக்கூடிய பி.பி.டி., ரகம் பயிரிடப்படுகிறது. இந்த ரகம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து என்பதால் கடந்த நவம் பர், டிசம்பர் மாதத்தில் பெய்த மழையால் நோய் தாக்குதலுக்குள் ளாகியது. இலை சுருட்டு புழு, தண்டு துளைப்பான், மற்றும் அறுவடை நேரத்தில் புகையான் தாக்குதல் என தொடர்ந்து நோய் தாக்கியது. நோயை கட்டுப்படுத்த மருந்து தெளிக்க ஏக்கருக்கு 2000 ரூபாய் வரை செலவு செய்தும் பயிரை காப்பாற்ற முடிந்ததே தவிர, நோயை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.



சம்பா நெல் சாகுபடியில் நல்ல நிலையில் ஏக்கர் ஒன்றுக்கு 40 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கும். இந்த ஆண்டு ஏக்கருக்கு 20 மூட்டைகள் கிடைப்பதே பெரிய விஷயமாக உள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஏக்கர் ஒன்றுக்கு மருந்து தெளிப்பு செலவு சேர்த்து குறைந்தது 15,000 ரூபாய் வரை செலவு செய்தும் குறைந்த மகசூல், விலையும் கடந்த ஆண்டை விட குறைவு, அறுவடைக்கு ஆட் கள் கிடைப்பதில்லை, இயந்திரம் வாடகையும் அதிகரிப்பு என விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புலம்புகின்றனர்.



விவசாயத்தை நம்பி வாங்கிய பயிர் கடன், தனி நபர் கடன் உள் ளிட்ட பல்வேறு கடன்களும் அதிகளவில் விவசாயிகளை வாட்டி வதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பயிர் இழப்புகளுக்கு பயிர் இழப்பீடு திட்டத்தின் மூலம் பிர்கா அளவில் மகசூல் பரிசோதனை அறுவடை மூலம் இழப்பீடு வழங்கும் நடைமுறையை பின்பற்றாமல், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாய நிலங்களையும் ஆய்வு செய்து அறுவடை மகசூல் பரிசோதனை செய்து இழப்பீட்டை ஈடுகட்டும் வகையில் பயிர்காப்பீடு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என உழவர் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் ரவீந்திரன் உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் கலெக்டர், வேளாண் இயக்குநர், வேளாண் உற்பத்தி ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



மழையால் நெற்பயிர்கள் சாய்ந்துவிட்ட நிலையில் ஆட்கள் வைத்து அறுவடை செய்ய வேண் டிய நிலை உள்ளது. ஆனால் ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் பெரும்பாலான பகுதிகளில் பெரம்பலூர், அரியலூர் மாவட் டங்களில் இருந்து ஆட் களை அழைத்துவந்து கூடுதல் கூலி கொடுத்து அறுவடை செய்து வருகின்றனர். மேலும் சக்கரம் உள்ள இயந்திரம் வைத்து நெல் அறுவடை செய்தால் உளுந்து பயிர் பாதிக்கும் என்பதால் பெல்ட் உள்ள இயந்திரம் கொண்டு அறுவடை செய்கின்றனர். அந்த இயந்திரத்திற்கு கூடுதல் கட்டணம் கட்ட வேண்டியுள்ளது.



கலப்படத்தால் விலை குறைவு: தேசிய விதை கழகத்தில் இருந்து வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் நெல் விதைகள் வாங்கி தரப்படுகிறது. இந்த ஆண்டு வாங்கிக் கொடுக்கப்பட்ட பி.பி.டி.,ரக விதையுடன் 120 நாட்களில் விளையக்கூடிய ஜெ.ஜெ.எல்., ரக நெல்லும் கலந்துவிட்டதால் இந்த ஆண்டு நெல் விலை கடந்த ஆண்டை விட குறைந்துவிட்டதாக விவசாயிகள் புலம்புகின்றனர். கடந்த ஆண்டு பி.பி.டி., ரக நெல் 61 கிலோ மூட்டை 900 ரூபாய் வரையும் குவிண்டாலுக்கு 1440 வரை விலை கிடைத்தாகவும், இந்த ஆண்டு கலப்பட நெல்லால் 725 ரூபாய் வரைதான் விலை கிடைப்பதாக புலம்புகின்றனர்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment