தேயிலை உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு நிதியம்
12:26 AM செய்திகள், தேயிலை உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு நிதியம் 0 கருத்துரைகள் Admin
தேயிலை உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சிறப்பு இலக்கு தேயிலை நிதியை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இதன் படி சுமார் 2.12 லட்சம் ஹெக்டேர்கள் பரப்பிலான கட்டுப்படியாகாத தேயிலை சாகுபடி பகுதிகளில், புதிய தேயிலை செடிகள் பயிரிடப்பட்டு வளப்படுத்தப்படும்.
பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 56,795 ஹெக்டேர்கள், 14,075 ஹெக்டேர்களில் என இரு திட்டங்களில் புதிய தேயிலை செடிகளை பயிரிடவும் வளப்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஆகும் செலவில் 25 விழுக்காடு மானியமாக மத்திய அரசு வழங்கும். அத்துடன் செலவில் 50 விழுக்காடு கடனாக இந்த சிறப்பு இலக்கு தேயிலை நிதியிலிருந்து வழங்கப்படும். மீதமுள்ள 25 விழுக்காடு செலவை தேயிலை விவசாயிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த நிதி 2007 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிதியில் இருந்து சென்ற ஆண்டு டிசம்பர் இறுதி வரை மானியமாக ரூ.48.69 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த மானியம் 9902 ஹெக்டேர்களில் புதிய செடி நடவு செய்யவும், 3685 ஹெக்டேர்கள வளப்படுத்தவும் வழங்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: செய்திகள், தேயிலை உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு நிதியம்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது