இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

'கள்' இறக்கும் போராட்டத்தில் உடுமலை விவசாயிகள் 'கப்-சிப்'

கள் இறக்கும் போராட்டத்தில் அரசுக்கு எதிராக கடந்தாண்டு களமிறங்கிய உடுமலைப்பகுதி விவசாயிகள் இந்தாண்டு மவுனம் காத்து வருகின்றனர்.

தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் கடந்தாண்டு ஜன. 21ம் தேதி "கள்' இறக்கும் போராட்டம் நடந்தது. தென்னை சாகுபடி அதிகமுள்ள கோவை மாவட்டத்தில் "கள்' இறக்கும் போராட்டம் அனைத்து தரப்பிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் கள் இயக்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இதன் பின், லோக்சபா தேர்தல் வந்ததால் தமிழக அரசு போராட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், அனைத்து தரப்பு தென்னை விவசாயிகளும், கள் இறக்கும் பணியில் குதித்தனர். அதிகாலை முதலே கள் விரும்பிகள் கூட்டம் தென்னந்தோப்புகளில் அலைமோதியது. தேர்தல் பிரசாரத்திலும் கள் முக்கிய பங்கு வகித்தது.
"கள்' இறக்குவது குறித்து கமிட்டி அமைத்து பரிசீலிக்கப்படும் என முதல்வர் பிரசாரத்தில் தெரிவித்தார். இதனால், கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்திருந்தனர். தேர்தல் முடிந்ததும், தமிழக அரசு கள் இறக்குபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க துவங்கியது. கடந்தாண்டு மே மாதம் தோப்புகளில் போலீசார் ரெய்டு நடத்தி பானைகளை உடைத்து, விவசாயிகளை கைது செய்தனர். கள் பானைகளை இறக்க இறுதி கெடு வழங்கப்பட்டது. போலீசாரின் அதிரடியால் விவசாயிகள் கள் இறக்கும் போராட்டத்தை கைவிட்டனர்.
அரசும் தென்னை, பனை விவசாயிகள் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. எனவே மீண்டும் ஜன. 21 ல் கள் இறக்கும் போராட்டம் நடக்கும் என கள் இயக்கம் அறிவித்தது. இதற்கு விவசாயிகள் தரப்பில் எந்த "ரியாக்ஷனும்' இல்லை. போராட்ட தேதியன்று உடுமலை பகுதியில் கள் இறக்குவதற்கான எந்த பணிகளிலும் விவசாயிகள் ஈடுபடவில்லை. கோவை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அரசுக்கு எதிராக தோப்புகளில் கறுப்பு கொடி கட்டப்பட்டது. இந்த எதிர்ப்பு கூட உடுமலை பகுதியில் இல்லை.
உடுமலையில் ஆர்.டி.ஒ., தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எந்த விவசாய சங்க பிரதிநிதிகளோ, விவசாயிகளோ கொண்டு வரவில்லை. இருப்பினும், அரசின் கவனத்தை ஈர்க்க

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment