உழவர் சந்தை: அமெரி்க்க பல்கலை மாணவர்கள் வியப்பு
2:52 PM உழவர் சந்தை: அமெரி்க்க பல்கலை மாணவர்கள் வியப்பு, செய்திகள் 0 கருத்துரைகள் Admin
கோவை: தமிழகத்தின் உழவர் சந்தைகளை அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் பார்வையிட்டு வியந்து பாராட்டினர்.
இந்திய பாரம்பரிய விவசாய முறைகள் பற்றி அறிந்துகொள்ள அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 30 மாணவர்கள் கோவை வந்துள்ளனர்.கோவையில் உள்ள வேளான் உற்பத்தி மையம் மற்றும் உழவர் சந்தையை அவர்கள் பார்வையிட்டனர்.
பருவகால பயிர் சாகுபடி, விவசாய பொருட்களின் விற்பனை முறை போன்றவை குறித்து மாணவர்கள் ஆர்வமாக கேட்டறிந்தனர்.
அமெரிக்காவில் பொதுவாக நுகர்வோர் சூப்பர்மார்க்கெட் மற்றும் தரகர்கள் மூலமாகவே காய்கறிகளை வாங்குகின்றனர். ஆனால் தமிழகத்தில் விவசாயிகளிடம் இருந்து நுகர்வோர் நேரடியாக பொருட்களை வாங்கும் முறையை வியப்பாக அவர்கள் பார்த்தனர்.
மாணவர்களுடன் வந்திருந்த கார்னெல் பல்கலைக்கழக விவசாயத் துறை தலைவர் பீட்டர் ஹாப்ஸ் கூறுகையில், இந்திய விவசாயிகள் எவ்வாறு பருவத்துக்கு ஏற்றபடி விதவிதமான பயிர்களை உற்பத்தி செய்கிறார்கள் என்பதை எங்கள் மாணவர்கள் அறிந்துகொள்ள விரும்புகிறோம்.
மேலும் உழவர் சந்தை மூலம் நுகர்வோரும் உற்பத்தியாளரும் நேரடியாக சந்திப்பதும், வாங்குபவர்களுக்கு காய்கறிகள் இயற்கையான பிரஷ்ஷாக கிடைப்பது எங்களுக்கு புதுமையானது.
இடைத்தரகு இல்லாத வணிகம் என்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான காய்கறிகள் நுகர்வோருக்கு கிடைப்பதும் இதில் முக்கியமான அம்சமாக நாங்கள் கருதுகிறோம் என்றார்.
வயல்வெளிகளில் இருந்து நேராக இங்கு வந்துள்ள காய்கறிகள் பார்ப்பதற்கு மிக அழகாகவும், சாப்பிடுவதற்கு மிக ருசியாகவும் இருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
கார்னெல் பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவசாய முறைகள் தொடர்பான முதுகலை பட்டப்படிப்புக்காக இந்த பயணத்தை மாணவர்கள் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.
குறிச்சொற்கள்: உழவர் சந்தை: அமெரி்க்க பல்கலை மாணவர்கள் வியப்பு, செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது