திருவண்ணாமலையில் மீன் குஞ்சு பண்ணை அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் மானியம்:கலெக்டர்
7:43 AM செய்திகள், திருவண்ணாமலையில் மீன் குஞ்சு பண்ணை 50 சதவீதம் மானியம்:கலெக்டர் 0 கருத்துரைகள் Admin
திருவண்ணாமலையில் மீன் குஞ்சு பண்ணை அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக கலெக்டர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழக அரசு மீன் வளத்துறையின் மூலம் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பில் ஆர்வம் உள்ள தகுதி வாய்ந்தவர்களுக்கு மீன்குஞ்சு வளர்ப்பு பண்ணை அமைப்பதற்கு 50 சதவீதம் மானியம் 2009-10ம் ஆண்டிற்கு வழங்கப்படவுள்ளது.
2009ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னர் அமைக்கப்பட்டுள்ள மீன் பண்ணைகளுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும். ஆண்டிற்கு 5 லட்சம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்ய தேவையான ஒரு ஹெக்டேர் இடவசதியும் போதுமான தண்ணீர் வசதி மற்றும் மின்சார வசதி உள்ளவர்கள் மட்டுமே தகுதியானவர்களாக தேர்வு செய்யப்படுவார்கள்.இந்த திட்டத்தில் மீன் குஞ்சுகள் பண்ணை அமைக்க 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அவற்றில் ஒன்றரை லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். மேற்படி குளம் அமைக்க தேவையான அளவு 4 அடி ஆழத்தில் 10க்கு 20 மீட்டர் அளவில் 6 குளமும், 20க்கு 13 மீட்டர் அளவில் 3 குளமும், 30க்கு 40 மீட்டர் அளவில் ஒரு குளமும் அமைக்க வேண்டும்.
இவற்றில் 3 மாதங்கள் மீன் குஞ்சுகளை வளர்க்க வேண்டும். வளர்ந்தவைகளை விற்பனை செய்யும் போது குறைந்தபட்சம் 2 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.தி.மலை மாவட்டத்தை சேர்ந்த மீன் குஞ்சு பண்ணைகள் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் மீன் வளர்ப்பு துறை உதவி இயக்குனர் (உள்நாட்டு மீன்வளம்) வேலூர் கோட்டை, வேலூர் என்ற முகவரியில் அலுவலக நாட்களில் தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை பெற்று உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்பிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிச்சொற்கள்: செய்திகள், திருவண்ணாமலையில் மீன் குஞ்சு பண்ணை 50 சதவீதம் மானியம்:கலெக்டர்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது