.விவசாயிகளுக்காக விவசாயிகளே விதை நெல் தயாரிக்கும் திட்டம்
12:12 AM .விவசாயிகளுக்காக விவசாயிகளே விதை நெல் தயாரிக்கும் திட்டம், செய்திகள் 0 கருத்துரைகள் Admin
ராஜபாளையம் :விவசாயத்துறையினரின் வழிகாட்டுதலின்படி விதை நெல் உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட உள்ளனர்.
ராஜபாளையம் பகுதியில் விவசாயிகளுக்கான விதை நெல் தேவையில் 20 சதவீதம் மட்டுமே விவசாயத்துறையால் பூர்த்தி செய்யப்படுகிறது. பெரும் பாலான விவசாயிகள், தனியார் விதை விற்பனை நிறுவனங்களையே சார்ந்துள்ளனர். இந்நிலையை மாற்ற, "விதை கிராமத் திட்டத்தின்' கீழ் விதை நெல் உற்பத்தியில் விவசாயிகளை ஈடுபடுத்த விவசாயத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, விதை உற்பத்திக்கான ஆதார விதை மற்றும் சான்று விதைகளை 50 சதவீத மானிய விலையில், இத்திட்டத்தில் பங்கேற் கும் விவசாயிகளுக்கு வழங்கப்படும். அவர்கள் அந்த ஆதார விதைகளைக் கொண்டு தரமான நெல் விதைகளை உற்பத்தி செய்வர். உற்பத்தி செய்த விதைகளை தங்கள் கிராமத்திலும், சுற்றுவட்டாரத்திலும் உள்ள விவசாயிகளுக்கு விற்பனை செய்யலாம். இதன் மூலம், விதை நெல் பற்றாக்குறை, வரும் காலங்களில் பெருமளவில் குறைந்து விடும் என விவசாயத்துறை கருதுகிறது.நடப்பாண்டில், ராஜபாளையம் பகுதியில் முகவூர் மற்றும் சுந்தரராஜபுரம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், இத்திட்டத்திற்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தரமான, வீரியமிக்க விதைகளை உற்பத்தி செய்யும் தொழில்நுட்ப முறை குறித்து, இவ்விவசாயிகளுக்கு மாவட்ட விவசாய துணை இயக்குனர் பாண்டியராஜ், ராஜாபளையம் உதவி விவசாய இயக்குனர் தனசேகரன் பயிற்சி அளித்தனர்.
குறிச்சொற்கள்: .விவசாயிகளுக்காக விவசாயிகளே விதை நெல் தயாரிக்கும் திட்டம், செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது