இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

சீதோஷ்ண நிலையில் மாற்றம்: தேயிலைத் தோட்டங்களில் சேதம்

குன்னூர் : "இயற்கை பேரிடர், சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால், நீலகிரி மாவட்ட தேயிலை, காபி தோட்டங்களில், ரூ.4 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்ட தோட்ட அதிபர்கள் சங்கத் தலைவர் ஜித்தன் பரிக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நவம்பர் மாதம் பெய்த மழையால், நீலகிரியில் உள்ள தேயிலை, காபி தோட்டங்களில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தேயிலைத் தோட்டங்களில் மண் சரிந்து, மரங்கள் சாய்ந்து, தடுப்புச் சுவர்கள் இடிந்துள்ளன. தோட்டங்களில் இருந்த சிறு ஓடைகள் திசைமாறியுள்ளன. தோட்டங்களில் உள்ள மேல் மண் அடித்து செல்லப்பட்டதால், தேயிலைச் செடிகள் பாதித்துள்ளன. 15 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் நாசமாகியுள்ளன.நான்சச், குன்னூர் டீ எஸ்டேட், கிரேக்மோர், சாம்ராஜ், தாய்சோலை, கிளண்டேல், பர்ன்சைடு, மேலூர், காட்டேரி எஸ்டேட்களில் அதிகளவு சேதம் ஏற்பட்டுள்ளது. தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு செல்லும் மின் இணைப்பில் அடிக்கடி ஏற்படும் பழுதால், ஜெனரேட்டரின் உதவியுடன் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தொழிற்சாலைகளுக்கு தேவையான விறகுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உற்பத்தி பாதித்துள்ளது.
தேயிலைத் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் தடுப்புச் சுவர் உட்பட பிற கட்டுமானப் பணிகளுக்கு, மாநில அரசின் நிதியுதவி கிடைக்கும் வகையில் திட்டம் இருந்தது.மீண்டும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி மண் வளம், நீர் வளம் பாதுகாக்கவும், தடுப்புச் சுவர் அமைக்கவும், அரசு உதவி செய்ய வேண்டும்.மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.குன்னூர் - ஊட்டி சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால், தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் இருந்து தேயிலைத் தூளை வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல கூடுதல் செலவாகிறது; மழையால் தேயிலை, காபி தோட்டங்களில் 4 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, ஜித்தன் பரிக் கூறியுள்ளார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment