இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கால்நடை ஆய்வாளர் பற்றாக்குறையால் சிகிச்சைக்கு சிரமம் ஈரோடு மாவட்ட கால்நடை வளர்ப்போர் புகார்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடை கிளை நிலையங்களில் பணியாற்றும் ஆய்வாளர்கள் பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு சரியான சிகிச்சை பெறமுடியவில்லை என கால்நடை வளர்ப்போர் புகார் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பாசன வசதிகள் அதிகளவில் உள்ளதால் கால்நடை வளர்ப்போரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஆவின் நிர்வாகம் சார்பில் தினசரி 2.46 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது தவிர தனியார் மூலமும் லட்சக்கணக்கான லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. நாட்டு மாடு, கலப்பின மாடுகள், ஜெர்சி, முரா உள்ளிட்ட ரக மாடுகள் வளர்க்கப்படுகிறது. மாடுகளுக்கு கால்நடை மருத்துவமனை மூலம் சினையூட்டப்படுவதால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிளை கால்நடை நிலையங்கள் செயல்படுகிறது. கிளை கால்நடை நிலையங்கள் மூலம் மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.


கால்நடை நிலையங்களில் பணியாற்றும் ஆய்வாளர்கள் பற்றாக்குறை உள்ளது. ஒரே ஆய்வாளர்கள் இரண்டு, மூன்று கிளை நிலையங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் தங்கள் மாடுகளுக்கு சினை ஊசி செலுத்த முடியாமலும், சிகிச்சை பெற முடியாமலும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்ற 2008 பட்ஜெட்டில் தமிழகம் முழுவதும் உள்ள 1,800 கிளை கால்நடை நிலைங்களில் 888 நிலையங்கள்; கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்பட்டது. கால்நடை மருந்தகங்களில் பணியாற்ற, தேர்வாணையம் மூலம் கால்நடை உதவி டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. தரம் உயர்த்தப்பட்ட மருந்தகங்களிலும் உதவி டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது.


பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராமசாமி கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் கால்நடை ஆய்வாளர்கள் பற்றாகுறை அதிகளவில் உள்ளது. மாடுகளுக்கு தடுப்பூசி போடுவது, சினை முட்டை செலுத்துவது உள்பட பல்வேறு சிகிச்சை அளிக்க முடியாமல் உள்ளது. சீதோஷ்ண நிலை மாறும்போது கலப்பின மாடுகளை நோய் தாக்கும். நோய் தாக்கப்பட்ட மாடுகளுக்கு முதற்கட்ட சிகிச்சை கூட பெற முடியாமல் உள்ளது. மாடுகளுக்கு சரியான சிகிச்சை அளிக்க முடியாததால் பால் உற்பத்தி குறைந்து விட்டது. கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் பற்றாக்குறையால் மாடுகளின் இனம் குறைந்து வருகிறது. மனிதர்களை காப்பாற்ற அரசு சார்பில் 108 ஆம்புலன்ஸ் விடப்பட்டுள்ளது. பால் அத்தியாவசிய தேவை என்பதால் மாடுகளை காப்பாற்ற கால்நடை டாக்டர்களை அதிகப்படுத்த வேண்டும். தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள கால்நடை உதவி டாக்டர்களை விரைவில் நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


கால்நடை மருத்துவமனை இணை இயக்குனர் தங்கவேல் கூறியதாவது: ஈரோடு, கோபி ஆகிய இரு பிரதம மருத்துவமனைகள், ஆறு கால்நடை மருத்துவமனை, 48 கால்நடை மருந்தகம், மூன்று நடமாடும் கால்நடை மருத்துவமனை, 59 கிளை நிலையங்கள் மாவட்டத்தில் செயல்படுகின்றன. ஈரோடு பகுதியில் உள்ள 34 கிளை நிலைங்களில் 25 ஆய்வாளர்கள், கோபி பகுதியில் உள்ள 25 கால்நடை கிளை நிலையங்களில் 10 ஆய்வாளர்கள் பணியாற்றுகின்றனர். கிளை நிலையங்களில் சினை ஊசி போடுவது, தடுப்பூசி போடும் பணி மற்றும் நோய் தாக்கப்பட்ட கால்நடைகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்படும். மற்ற சிகிச்சைகள் மருத்துவமனை, மருந்தகங்களில் அளிக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் 28 கிளை நிலையங்கள் மருந்தகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மருந்தகங்களுக்கு விரைவில் உதவி டாக்டர்கள் வருவர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment