இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளை பாதுகாக்க முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தல்

வடமதுரை: கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை பாதுகாக்க முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் சிறிய, நடுத்தரம் என சுமார் 50 ஆயிரம் கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. சிறு விவசாயிகளே இத்தொழிலில் ஈடுபட்டுள்ளதால் ஒரு லட்சம் விவசாய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. கோழி வளர்ப்புக்கு கட்டுபடியான விலையை கோழி தொழிலில் உள்ள பெரிய நிறுவனங்கள் தராத நிலையில் சில விவசாயிகள் சொந்தமாக குஞ்சுகளை வாங்கி பண்ணையை நடத்துகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கோழி குஞ்சுகளை தயார் செய்து விற்கும் நிறுவனங்கள் எவ்வித காரணமுமின்றி குஞ்சின் விலையை ரூ.8ல் இருந்து ரூ.30 வரை உயர்த்தி விற்கின்றன. இப்படி அதிக உற்பத்தி செலவுடன் கோழிகளை விவசாயிகள் வளர்த்தால் பெரிய நிறுவனங்கள் தாங்களே குறைந்த விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கின்றன. இதனால் விவசாயிகள் நஷ்டமடையும் நிலை ஏற்படுகிறது.
சில நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகளுக்கு குஞ்சுகளை வழங்கி கோழியாக வளர்த்து மீண்டும் அதே நிறுவனங்களுக்கு தரும் வகையில் ஒப்பந்தம் செய்கின்றனர். இதற்காக வளர்ப்புக்கூலி கிலோ ஒன்றிற்கு ஒன்றரை முதல் மூன்று ரூபாய் வரை தன்னிச்சையாக நிர்ணயம் செய்து வழங்குகின்றன. இந்த கூலி மிகவும் குறைவாக இருப்பதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சுமார் 3 முதல் 5 லட்ச ரூபாய் வரை கடன் பெற்று 10 லட்ச ரூபாய் வரை செலவிட்டு பண்ணை அமைத்து தொழில் செய்வதால் இத்தொழிலை விட்டு செல்லவும் முடியாத நிலை உள்ளது. மின் கட்டண, வரி சலுகைகள், கோழி வளர்ப்பு கூலியை உயர்த்தல் உள்ளிட்ட விஷயங்களை பேசி தீர்க்க கோழி வளர்ப்பு தனியார் நிறுவன உரிமையாளர்கள், கறிக்கோழி வளர்ப்போர், கால்நடைத்துறை அதிகாரிகள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமென வேடசந்தூர் தாலுகா கறிகோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தினர் கோரியுள்ளனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment