எதிர்பார்த்த மழை இல்லை : நெல் விவசாயிகள் கண்ணீர்
9:53 PM எதிர்பார்த்த மழை இல்லை : நெல் விவசாயிகள் கண்ணீர், செய்திகள் 0 கருத்துரைகள் Admin
சிவகங்கை : பருவமழை குறைவாக பெய்துள்ளதால் நெற்பயிருக்கு போதிய தண்ணீர் இன்றி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மாவட்டத்தில் பிரதானமாக நெற்பயிர் கடந்த ஆண்டு 90 ஆயிரம் எக்டேரில் பயிரிடப்பட்டது. இந்த ஆண்டு 74 ஆயிரம் எக்டேராக குறைந்துள்ளது. பருவ மழை காலதாமதமாக பெய்ததால் இங்கு அக்டோபரில் துவக்கவேண்டிய விவசாய பணிகள் நவம்பரில் தான் துவங்கியது. கடந்த ஆண்டு 904 மி.மீ., மழை பதிவானது. ஆனால் நடப்பாண்டு 827 மி.மீ., மட்டுமே பதிவானது. கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் 67 மி.மீ., குறைவாக பெய்துள்ளது. போதிய மழையின்றி இங்குள்ள 4,813 கண்மாய்களில் 25 சதவீதத்திற்கு மட்டுமே மழை நீர் தேங்கியுள்ளது. வைகை அணையிலிருந்து இம்மாவட்ட கண்மாய்களுக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் நான்கு நாட்களிலேயே நிறுத்தப் பட்டது. குறைவான அளவில் தண்ணீர் வழங்கப் பட்டதால் கண்மாய்களில் நீர் குறைவாகவே உள்ளன. இதனால் பயிரிட்டுள்ள நெற்பயிர்களை காப்பாற் றக்கூட தண்ணீர் இல்லையே என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர். படமாத்தூரை சேர்ந்த விவசாயி கந்தன் கூறுகையில், ""மானா வாரியாக பயிரிட்ட நெல் தாமத மழையால் பாதியே விளைந்தது. கண்மாய் பாசனத்தை நம்பி விவசாயம் செய்துள்ளேன். ஆனால் அங்கும் தண்ணீர் இல்லை''.விவசாயத்துறை துணை இயக்குனர் ரவி குலசேகர பாண்டியன் கூறுகையில், ""கடந்த ஆண்டைவிட 67 மி.மீ., குறைவான மழை பெய்துள்ளன. டிசம்பரில் போதிய மழை பெய்யும். விவசாயிகள் கண்மாய்களில் தேக்கியுள்ள தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளவும்'' என்றார்.
குறிச்சொற்கள்: எதிர்பார்த்த மழை இல்லை : நெல் விவசாயிகள் கண்ணீர், செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது