வரதமாநதி அணைக்கு 144 கன அடி நீர்வரத்து
9:27 PM செய்திகள், வரதமாநதி அணைக்கு 144 கன அடி நீர்வரத்து 0 கருத்துரைகள் Admin
பழநி : கொடைக்கானல் மலையில் பெய்யும் மழையால் பழநியை சுற்றியுள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பாலாறு-பொருந்தலாறு அணைக்கு வினாடிக்கு 112 கன அடி நீர்வரத்துள்ளது. 53 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. குதிரையாறு அணைக்கு வினாடிக்கு 15 கன அடி நீர்வரத்தும்,17 கன அடி நீர்வெளியேற்றமும் உள்ளது. வரதமாநதி அணைக்கு வினாடிக்கு 144 கன அடி நீர்வரத்தும் அதே அளவு வெளியேற்றமும் உள்ளது. மூன்று அணைகளும் கடந்த மாதமே நிரம்பியது குறிப்பிடத்தக்கது. மழைபதிவு(மி.மீ.,): வரதமாநதி-14, குதிரையாறு-3, பாலாறு-6.
குறிச்சொற்கள்: செய்திகள், வரதமாநதி அணைக்கு 144 கன அடி நீர்வரத்து
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது