விழுப்புரம் மாவட் டத்தில் பயறுவகை சாகுபடி மூன்று மடங்காக உயர்ந்துள்ளது என திண்டிவனம் எண்ணைவித்து ஆராய்ச்சி நிலைய முதல் வர் டாக்டர் ராமமூர்த்தி கூறினார்.
இது குறித்து அவர் தினமலர் நிருபரிடம் கூறியதாவது:விழுப்புரம் மாவட்டத் தில் விவசாயிகள் உளுந்து, பாசிப்பயிறு, காராமணி ஆகிய பயறுவகைகளை ஒரு ஆண்டுக்கு சராசரியாக 57 ஆயிரம் ஏக்கர் அளவிற்கே இதுவரை சாகுபடி செய்து வந்தனர். தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மூலம் செயல்பட்டு வரும் திண்டிவனம் எண்ணை வித்து ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப பயிற்சிகள், விதை நேர்த்தி, சாகுபடி முறை, களப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயற்சிகள் அளிக்கப் பட்டது. இதன் மூலம் வேளாண் சம்மந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் காரணமாக இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயிறு வகைகளை சாகுபடி செய்துள்ளனர். வரும் காலங்களில் இந்த வளர்ச்சி மேலும் உயரும். இவ்வாறு டாக்டர் ராமமூர்த்தி கூறினார்.