இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

சேது சமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேறும்-வாசன்

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசும் கப்பல் துறையும் உறுதியுடன் உள்ளன என்றும், தமிழக மக்களின் கனவுத் திட்டமான இந்தத் திட்டம் நிச்சயம் நிறைவேறும் என்றும் மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், சேது சமுத்திரக் திட்டம் தமிழக மக்களின் கனவுத் திட்டம். இந்தத் திட்டத்தால் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறுவது மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதார வளமும் பெருகும்.

இந்த திட்டம் தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு விசாரணை [^] முடிவடைந்து, தீர்வு கிடைத்ததும், திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.

மத்திய அரசும் கப்பல் துறையும் இந்த திட்டத்தை நிறைவேற்றி முடிப்பதில் உறுதியுடன் உள்ளன.

எனவே, தமிழக மக்களின் கனவுத்திட்டமான சேது சமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேறும்.

சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை 12 கி.மீ. தூரத்திற்கு உயர்மட்ட மேம்பால சாலை அமைக்கும் திட்டம் ரூ. 1,530 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்காக சுமார் 7,400 குடிசைகள் அகற்றப்படுகின்றன.

அந்த குடிசைகளில் வாழும் மக்களுக்கு மாற்று இடம் தருவதற்கான பணிகளை தமிழக குடிசை மாற்று வாரியம் செய்து வருகிறது. பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கி அவர்களை குடியமர்த்துதல் போன்ற பணிகள் முடிவடைந்ததும் இத்திட்டப் பணிகள் துவங்கும் என்றார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment