பன்னாட்டு நிறுவனங்களின் சதியே பி.டி. கத்தரி: ம.பி. அரசு
10:42 PM செய்திகள், பன்னாட்டு நிறுவனங்களின் சதியே பி.டி. கத்தரி: ம.பி. அரசு 0 கருத்துரைகள் Admin
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரியை பயிரிடச் செய்வது பன்னாட்டு நிறுவனங்களின் சதிச்செயல் எனத் தெரிவித்துள்ள மத்தியப் பிரதேச அரசு, தேவைப்பட்டால் பி.டி. கத்திரி பயிரிடுவதற்கு தடைவிதித்து தீர்மானம் நிறைவேற்றுவோம் எனத் தெரிவித்துள்ளது.
மரபணு மாற்றப் பயிர்கள் தொடர்பாக திருவனந்தபுரத்தில் நடக்கும் 2 நாள் தேசிய கருத்தரங்கில் பங்கேற்ற மத்தியப் பிரதேச விவசாயத்துறை அமைச்சர் ராமகிருஷ்ண குஸ்மரியா, “விவசாயம் மாநில அரசின் வரம்புக்கு உட்பட்டது. இதில் மத்திய அரசு தனது கொள்கைகளை திணிக்கக் கூடாது” என்றார்.
பி.டி. கத்தரியை பயிரிடலாம் என மரபணு மாற்ற ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது பற்றிக் கேட்டதற்கு, “பி.டி. கத்தரி குறித்து எந்தவிதமான சுதந்திர ஆய்வும் இதுவரை முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. எனவே அதுகுறித்த அனைத்து பரிந்துரைகளும் ஒருதலைப்பட்சமானதே” என்றார்.

குறிச்சொற்கள்: செய்திகள், பன்னாட்டு நிறுவனங்களின் சதியே பி.டி. கத்தரி: ம.பி. அரசு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது