இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

மரபணு மாற்றிய காய்கறி விதைவிவசாய நிலங்களை பாதிக்கும்: மத்திய அரசுக்கு பறந்தது மனு

"மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி விதைகள், நம் நாட்டின் பாரம்பரிய காய்கறி பயிர்களையும், விவசாய நிலங்களையும் பாதிக்கும்' என்று எச்சரிக்கை விடுத்து, மத்திய அமைச்சருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட காய்கறி பயிர் விதைகளை அறிமுகப்படுத்த, அமெரிக்க நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளன. புழு, பூச்சி தாக்குலை தவிர்க்க வேண்டும் என்ற நாக்கத்தில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளை அறிமுகப்படுத்துவதால், மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும். காய்கறிகளை வேக வைக்காமல் சாப்பிட்டால், அதிலுள்ள வைரஸ் விஷம் மனிதனை கடுமையாக தாக்கும்.இவ்வகை காய்கறிகள் பயிரிடப்படும் நிலமும், சில ஆண்டுகளில் விஷத்தன்மை உடையதாக மாறிவிடும் என்று இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். இக்காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.இருப்பினும், மத்திய அரசு, "பி.டி.,' கத்திரிக்காயை அறிமுகப்படுத்த ஆர்வம் காட்டி வருகிறது. "பி.டி.,' கத்திரிக்காயில் வைரஸ் விஷம் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ள மத்திய அரசின் நிபுணர் குழு, "நன்கு வேக வைத்தால் விஷத்தன்மை மாறி விடும்' என்ற விதை நிறுவனங்களின் கூற்றையும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதையடுத்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ், இந்த கத்திரிக்காயை அறிமுகப்படுத்துவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறார். இதற்கு, திருப்பூர் தினசரி காய்கறி உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இச்சங்கம் சார்பில், மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.அதில், "மரபணு மாற்றப்பட்ட காய்கறி விதைகளை அறிமுகப்படுத்தினால், நம்முடைய பாரம்பரிய காய்கறி பயிர்களையும், நிலத்தையும் பாதிக்கும். உணவு பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்படும். எனவே, "பி.டி.,' கத்திரிக்காய் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி விதைகளை அறிமுகப்படுத்தக்கூடாது; இந்நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்,' என்று கூறப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment