இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

செங்கல் சூளைக்காக மண் அள்ளுவதால் ஏரிகளில் நீர் தேங்காமல் விவசாயிகள் அவதி

செங்கல் சூளைக்காக மண் அள்ளுவதால் ஏரிகளில் நீர் தேங்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.செங்கம் ஒன்றியத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இதிலிருந்து செங்கல் சூளைகளுக்கு தினமும் இரவு பகலாக டிராக்டர் மூலம் மண் எடுத்து செல்லப்படுகிறது. இதனால் பெரும்பாலான ஏரிகளில் தண்ணீர் தேங்குவதே கிடையாது.

ஏரியை நம்பி பிழைக்கும் விவசாயிகள் பெரும் பாதிப் புக்கு உள்ளாகிறார்கள். அதைத் தொடர்ந்து செங்கல் சூளை வைப்பதற்கு செங்கம் பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்படுகிறது. இதனால் செங்கம் பகுதியில் பருவமழை மிகவும் குறைவாக பொழிகிறது. குறைந்த மழை பெய்தாலும் ஏரியிலும் சிறிதளவு கூட தண்ணீர் நிற்கவில்லை.

இதனால் மண் எடுப்பவர்களுக்கு மிகவும் எளிமையாக உள்ளது. இப்போது அரசின் நூறு நாள் வேலை திட்டத்தின்கீழ் அனைத்து ஏரிகளும் தூர் வாரப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி செங்கல் சூளை விற்பனையாளர்கள் ஏரிகளின் கரைகளை உடைத்தும், விவசாயிகளுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களை உடைத்தும் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் ஏரியில் குறைந் தளவு தண்ணீர் நின்றால்கூட அது விவசாயிகளின் பயன் பாட்டுக்கு செல்ல வழியில்லாமல் இருக்கிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு ஏரி தண்ணீர் பயன்படும் வகையில் வழிவகை செய்யவேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். தீத்தாண்டப்பட்டு, பரமனந்தல், கொட்டாவூர், செ. நாச்சிப்பட்டு, கொட்டகுளம் ஆகிய பகுதிகளில் பல லட்சம் செலவில் செங்கம் செய்யாற்றில் செக்டேம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் பக்கத்தில் உள்ள வண்டல் மண் வாரப்பட்டதால், தண்ணீர்வந்தால் செக் டேம் உடையும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப் பட்ட துறையினர் பல லட்சம் மதிப்புள்ள செக்டேம்களை பராமரிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர் பார்க்கின்றனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment