இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

ஆனைமலை கொப்பரை ஒரு கிலோ 31.40 ரூபாய்

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில் ஒரு கிலோ கொப்பரைக்கு அதிகபட்சமாக 31.40 ரூபாய் விலை கிடைத்தது.ஆனைமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் 22 பேர் 27 மூட்டை கொப்பரையை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு எடுத்து வந்தனர். இவைகளை தரம் பிரித்து மூன்று வியாபாரிகள் ஏலம் கூறினர். விற்பனைக்கூட கண்காணிப்பாளர் (பொறுப்பு) சந்திரசேகர் ஏலம் நடத்தினார்.முதல் தர கொப்பரை 21 மூட்டை ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு குறைந்தபட்சமாக 27.25 ரூபாய் முதல் அதிகபட்சமாக 31.40 ரூபாய் வரை விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை 6 மூட்டை ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு குறைந்தபட்சமாக 18.50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 21.60 ரூபாய் வரை விலை கிடைத்தது.அதிகாரிகள் கூறியதாவது:


ஆனைமலை விவசா�யிகள் பொங்கல் பண்டிகைக்கு தயாராகிக்கொண்டுள்ளதால் கொப்பரை உற்பத்தி குறைந்துள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, கொப்பரை உற்பத்தி அதிகரித்து, விலையும் சூடுபிடிக்கும் என்றனர்.கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்50 கிலோ எடையுள்ள 600 மூட்டைகளில் உள்ள கொப்பரைகளை பொள்ளாச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தினர் கிலோ ஒன்றுக்கு 44.50 ரூபாயுக்கு எடுத்தனர். டிச.28ல் 326ம், டிச.29ல் 327 மூட்டைகள் முதல் தர கொப்பாரை கொள்முதல் செய்யப்பட்டது.தற்போது, இருப்பு பரிசோதனை முடிந்தது, விவசாயிகளுக்கு தெரியாததால், குறைந்த விவசாயிகளே வந்ததால், 192 மூட்டை கொப்பரை தேங்காய் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. கொப்பரை கொள்முதல் டிச.31ம் தேதியுடன் முடிவடைந்து, கொப்பரை இருப்பு பரிசோதனை செய்து மார்ச் மாதம் வரை கொப்பரை கொள்முதல் செய்யப்படவுள்ளது.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment