இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விருதுநகர் விவசாய பகுதிகளில் மறைமுக மின் வெட்டு : தண்ணீர் பாய்ச்சும் பணி பாதிப்பு


ராஜபாளையம் : விவசாய நிலப்பகுதியில் பம்ப் ஷெட் இயக்குவதற்கான மும்முனை மின்சாரம், குறைந்த நேரமே வினியோகிக்கப்படுவதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
ராஜபாளையத்திற்கு மேற்கே அய்யனார் கோயில், ஆறாவது மைல், சம்மந்தபுரம், செண்பகத்தோப்பு, மருங்கூர், வடக்கு வெங்காநல்லூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தென்னை, மாந்தோப்புகள் உள்ளன. கண்மாய்களையொட்டி உள்ள பகுதிகளில் பரவலாக நெல் மற்றும் கரும்பு பயிரிடப்பட்டுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதியாக இருப்பதால் ஆண்டின் பெரும்பாலான நாட்கள் கிணறுகளில் தண்ணீர் இருக்கும். கடந்த மாதம் வரை முழுமையான மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வந்த நிலையில், இருவாரங்களாக நகர் பகுதியில் உள்ளது போல், வயல்காட்டுப் பகுதியிலும் மறைமுக மின்வெட்டை மின்வாரியம் அமல்படுத்தியுள்ளது.
அதாவது பம்ப் ஷெட்டை இயக்குவதற்கு தேவையான மும்முனை(திரி பேஸ்) மின்சாரத்திற்கு பதிலாக இருமுனை(டூ பேஸ்) மின்சாரம் மட்டுமே 18 மணி நேரம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 6 மணி நேரம் மட்டுமே மும் முனை மின்சாரம், அதுவும் காலை, மதியம், இரவு என முறை வைத்து வினியோகிக்கப்படுகிறது. அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் பம்ப் ஷெட்டை இயக்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர்.
விவசாயத்திற்கான வேலை ஆட்கள் பற்றாக்குறை உள்ள காலத்தில், நாளொன்றுக்கு 6 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்குவதால், குறிப்பிட்ட நேரத்தில் பணியாளர்களை வரவழைப்பது சிரமமாக உள்ளது. மேலும், இப்பகுதிகளில் காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதால், இரவில் வேலை செய்ய யாரும் முன் வருவதில்லை. எனவே, இரவு நேரத்தில் வழங்கப்படும் மும்முனை மின்சாரத்தை பயன்படுத்த இயலவில்லை. அனைத்து விவசாய நிலப் பகுதிகளுக்கும் பகல் நேரம் முழுவதும் மும்முனை மின்சாரம் வழங்க மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment