திண்டுக்கல்: தொடர் மழையால் அணைகள் நிரம்பின! :குளங்கள் நிரம்பாததால் விவசாயிகள் கவலை
8:14 PM செய்திகள், திண்டுக்கல்: குளங்கள் நிரம்பாததால் விவசாயிகள் கவலை 0 கருத்துரைகள் Admin
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீண்டும் அணைகள் நிரம்பின.அதே நேரத்தில் குளங்கள், கண்மாய்கள் நிரம்பாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக அவ்வப்போது தூறல் மழை பெய்தது. கொடைக்கானல் மலைப்பகுதியில் மட்டும் கனமழை பெய்ததால்,பழநி தாலுகாவில் உள்ள மாவட்டத்தில் பெரிய அணையான பாலாறு, பொருந்தலாறு, குதிரையாறு, வரதமாநதி அணைகள் இரண்டாவது முறையாக நிரம்பி வழிகின்றன.ஒட்டன்சத்திரத்தில் உள்ள பரப்பலாறு அணையும், வத்தலக்குண்டில் உள்ள மருதாநதி அணையும் நிரம்பும் நிலையில் உள்ளது.
நத்தத்தில் குறைவு: மாவட்டத்தில் எப்போதும் அதிகளவு மழை பெய்யும் பகுதியான நத்தத்தில் இந்தாண்டு எதிர்பார்த்த மழையில்லை. வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் மழையில்லாமல் உள்ளது. கடந்தாண்டு உடைந்த குடகனாறு அணையில் நீர் வரத்து சுத்தமாக இல்லை.
கிணறுகளில் நீர் மட்டம் ஓரளவு உயர்ந்தாலும், கண்மாய், குளங்களுக்கு பெரிய அளவில் நீர் வரத்து இல்லாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் காலை முதல் மழை தொடர்ந்து பெய்வதால் குளிர்ந்த காற்று வீசுகிறது.நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விபரம் (மி.மீ.,யில்) : நிலக்கோட்டை -2.4, திண்டுக்கல் -15.5, நத்தம்-11, பழநி-22, ஒட்டன்சத்திரம் -23, சத்திரப்பட்டி-27, வேடசந்தூர் 13.5, கொடைக் கானல் போட் கிளப்-24.2, அப்சர்வேட்டரி-27.10.பாலாறு-77, குதிரையாறு-118, வரதமாநதி-136.
விடிய விடிய மழை:பாலாறு-பொருந்தலாறு அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடி நீர்வரத்துள்ளது. அதே அளவு நீர் வெளியேற்றப்படுகிறது.அணையின் மொத்த உயரமான 65 அடியும் நிரம்பி வழிகிறது. வரதமாநதி அணையின் மொத்த உயரம் 67 அடி. அணை நிரம்பி வழிகிறது.வினாடிக்கு 875 கன அடி நீர்வரத்தும், அதே அளவு வெளியேற்றமும் உள்ளது. குதிரையாறு அணையின் மொத்த உயரம் 80 அடி. நேற்றைய நீர்மட்டம் 76.45 அடி. வினாடிக்கு 133 கன அடி நீர்வரத்தும், 133 கன அடி நீர் வெளியேற்றமும் உள்ளது.
விவசாயிகள் கவலை:தொப்பம்பட்டி ஒன்றியத்தில் தொடர் மழை பெய்வதால் கிணறுகளின் நீர்மட்டம்,நிலத்தடி நீர்மட்டம் உயர துவங்கியுள்ளது. அதேசமயம் இப்பகுதிகளில் கண்வலிக்கிழங்கில் விதைகள் உதிர துவங்கியுள்ளன.இதனால் வரும் நாட்களில் விவசாயத்தில் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை கொண்டுள்ளனர்.
குறிச்சொற்கள்: செய்திகள், திண்டுக்கல்: குளங்கள் நிரம்பாததால் விவசாயிகள் கவலை
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது