இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கொடுமுடி மார்க்கெட்டில் குப்பைகள்:​ விவசாயிகள் அவதி

கொடுமுடி பேரூராட்சியின் தினசரி மார்க்கெட் குப்பைமேடானதால்,​​ விளை பொருட்களுடன் விவசாயிகளும்,​​ சிறு வியாபாரிகளும் தெருவில் தத்தளித்து வருகின்றனர்.

​ கொடுமுடி பேரூராட்சியின் குருக்கள் தெருவில் சுமார் 25 சென்ட் இடத்தில் தினசரி மார்க்கெட் அமைந்துள்ளது.​ ​ இதில் இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சிறு வியாபாரிகளும்,​​ விவசாயிகளும் தேங்காய்,பழங்கள்,​​ கீரைகள்,​​ காய்கறிகள் மற்றும் தானியங்கள் உள்ளிட்ட தங்கள் விளை பொருட்களை கொண்டுவந்து விற்பனை செய்துவந்தனர்.

​ இந்நிலையில் சில காலமாக மார்க்கெட் பகுதிக்குள் தேங்கும் குப்பைகள் அகற்றப்படாமல் போனதால் மலை போல் தேக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது.​ இதுகுறித்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வார்டு கவுன்சிலர்,​​ பேரூராட்சித் தலைவர் மற்றும் செயல் அலுவலர் உள்ளிட்டோரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் வேறு வழியில்லாமல் தெருவின் இருபுறமும் அமர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

​ இதனால் பொதுமக்கள் தெருப்புழுதி படிந்த பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.​ மேலும் இத்தெருவைக் கடந்து காவிரி ஆறு மற்றும் மகுடேஸ்வரர்,​​ வீரநாராயணப் பெருமாள் கோவிலுக்கு செல்லும் ஆயிரக்கணக்​​கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தெருவில் நடைபெறும் வியாபாரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.​ ​ மார்க்கெட்டில் பொருட்களை வாங்க வரும் பெண்கள் கூட்ட நெரிசலின் இடிபாடுகளுக்கிடையே அவதிப்பட்டு வருகின்றனர்.​ இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டும் எவ்விதப் பலனுமில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

​ பேரூராட்சி சார்பில் ஏலம் விடப்பட்டு மார்க்கெட் வியாபாரத்திற்காக ​ சுங்க வசூல் நடைபெறுகிறது.​ இதில் அரசு விதிப்படி தலைச்சுமைக்கு ரூ.1-ம்,​​ சைக்கிளுக்கு ரூ.2-ம் மார்க்கெட்டிற்குள் ஸ்டாலில் கடைகள் வைத்துக்கொள்ள ரூ.5-ம் கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும்.​ ஆணால் ஏலதாரர்கள் பேரூராட்சியின் முத்திரை இல்லாத சீட்டைக் கொடுத்து ஒட்டுமொத்தமாக அணைவரிடமும் ரூ.5ஐ வசூலித்து வருதாக விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் புகார் தெரிவிக்கின்றனர்.​ இதுகுறித்து அவர்களிடம் கேட்டால்,​​ நாங்கள் அப்படித்தான் வசூல் செய்வோம் நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் புகார் கொடுங்கள் என்று கூறுகின்றனர்.​ ​ இதுகுறித்து செயல் அலுவலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.​ ​ ​ ​ ​ ​ ​

​ இந்நிலையில் சாலை ஒரத்தில் போக்குவரத்திற்கு இடையூறு செய்வதாக காவல் நிலையத்தில் வழக்கு போட்டு விடுவதால் நீதிமன்றத்தில் அபராதமும் செலுத்தி வருகிறோம் என்றார் சிறு வியாபாரி பொன்னம்மாள்.​ ஏலதாரருக்கு அதிக தொகையும் கொடுத்துவிட்டு,​​ நீதிமன்றத்தில் அபராதமும் செலுத்தி சாலைப்புழுதியில் அவதிப்பட்டு வருகிறோம் என்றார் விவசாயி தங்கவேல்.

​ இதுபோன்ற பிரச்னைகள் தொடர்பாக செயல் அலுவலரிடம் உடனுக்குடன் நேரில் சந்தித்து புகார் தெரிவிக்க பலமுறை முயற்சித்த போதும் வெளியூரிலிருந்து அவர் வந்து செல்வதால் அலுவலகத்தில் அவரை சந்திப்பதில் சிரமம் ஏற்படுவதாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆறுமுகம் தெரிவித்தார்.

​ பொதுமக்கள்,​​ விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் குறைகளைப் போக்க மார்க்கெட்டிற்குள் வியாபாரம் நடைபெற மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே வரி செலுத்துவோர் மற்றும் பொதுநல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment