இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

காய்புழு தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயத்துறை ஆலோசனை

போடி : மொச்சை, தட்டைபயறு ஆகியவற்றில் காய்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
போடி, சிலமலை, மணியம்பட்டி, சூலப்புரம், ராசிங்காபுரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் தட்டைப்பயறும், பிஞ்சு பருவத்தில் மொச்சையும் உள்ளன. தற்போது குளிர், பனிப் பொழிவு அதிகரித்துள்ளதால் பயிர்களில் பச்சைக் காய்ப்புழு மற்றும் புருனியா காய்ப்புழுவின் தாக் குதல் காணப்படுகிறது.
விவசாய உதவி இயக்குநர் ஜெகப்பிரியாபதி கூறுகையில்; காய்புழு தாக்குதலை கட்டுப்படுத்த எண்டோசல்பான் 35 இ.சி, 2 மில்லி, கார்பரில் டபிள்யூ 50% , பாசலோன் 35 இ.சி., 2 மில்லி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை செடிகள் நன்கு நனையுமாறு கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். உயிரியல் பூச்சி கொள்ளி மருந்துகள் மூலம் காய்ப்புழுவை கட்டுப்படுத்த எக்டேருக்கு 250 மில்லி என்.பி.வி., கரைசலை 200 லிட்டர் நீரில் கலந்து பயிர்கள் நன்கு நனையும் வகையில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். போடி வட்டார விவசாய விரிவாக்க மையத்தில் போதுமான பூச்சிகொல்லி மருந்துகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என்றார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment