இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

தனியார் ஆலைகளுக்கு கரும்பு அனுப்புவதில் விவசாயிகள் ஆர்வம்

கள்ளக்குறிச்சி : வருவாய் அதிகரிப்பதுடன், வேலை குறைவு என்பதால், கரும்புகளை தனியார் ஆலைக்கு அனுப் புவதில் விவசாயிகள்ஆர்வம் காட்டுகின்றனர்.விவசாயிகள் அரசு ஆலையில் பதிந்து அனுப்பும் ஒரு டன் கரும்பிற்கு 1,550 ரூபாய் தரப்படுகிறது. தனியார் ஆலைகளில் 1,500 தருகின்றனர். ஆனாலும், தனியார் ஆலைக்கு தங்கள் கரும்புகளை அனுப்புவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
அரசு ஆலைகளில் பதியும் கரும்புகளை தனியார் ஆலைகளுக்கு அனுப்புவதை தடுக்க, அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர். கரும்பு பதிவதிலிருந்து வெட்டு ஆர்டர் வரை காசு கொடுத்தால் தான் காரியம் நடக்கும் நிலை, அரசு ஆலைகளில் உள்ளது. அரசு ஆலையில் பதியும் கரும்பிற்கு, 12 மாத விளைச்சலுக்கு பின்னரே கட்டிங் ஆர்டர் தருகின்றனர். தனியார் ஆலைகளில் எட்டு மாத விளைச்சல் போதும் என வாங்கிச் செல்கின்றனர். இதனால், இரண்டு ஆண்டுகளில், மூன்று முறை விளைச்சல் (மறு தாம்பு) கிடைத்து விவசாயிகளுக்கு லாபம் அதிகமாகக் கிடைக்கிறது. அரசு ஆலைகளுக்கு அனுப்பும் கரும்பு வெட்டு கூலி ஆள் பிரச்னை, விவசாயிகளுக்கு தலைவலியாக உள்ளது. ஒரு டன் கரும்பு வெட்ட கூலி 400 ரூபாய் முதல் 600 வரை செலவாகிறது. வாகன வாடகை ஆலை நிர்வாகம் தந்தாலும், லோடு மாமூல் ஒவ்வொரு முறையும் டிரைவருக்கு 300 ரூபாய் தர வேண்டும்.தனியார் ஆலைகள் மூலம் கரும்பு வெட்டும் போது, விவசாயிகளுக்கு எந்த கவலையும் இல்லை. வயலை காண்பித்தால், அவர்களே வெட்டி எடுத் துச் செல்கின்றனர். எந்த செலவும் இல்லாமல் ஒரு டன்னிற்கு 1,500 ரூபாய் கையில் கிடைக்கிறது.அரசு ஆலைகளில் பதியும் கரும்புக்கு வங்கி கடன், உரம் கடனாக கிடைப்பதால் மட்டுமே அரசு ஆலைகளுக்கு கரும்பு அனுப்புவதாக விவசாயிகள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment